அத்துருகிரிய, பொரல்ல பகுதிகளில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரங்கல சந்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயினுடன் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொரல்ல - சஹஸ்புர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 2 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயினுடன் அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.