கம்பளை - வெலம்பொட பகுதியில் 20 ஆயிரம் கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு 3,000 கிலோ தேயிலையை கழிவு மட்டுமே வைத்திருக்கு அனுமதி இருந்த போதிலும் அவர் மேலதிகமாக தேயிலை கழிவுகள் வைத்திருந்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்தவகையில் வெலம்பொட பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட சோதனையின்போது சுமார் 15,000 கிலோ கிராம் சட்டவிரோத கழிவு  தேயிலை பறிமுதல் செய்யப்பட்டது.

 இந்நிலையில் இக் கழிவு தேயிலைகள் அனுராதபுரம் , பொலன்னறுவ மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விற்கப்பட தயாராக இருந்தமை  பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.