அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு திறக்கப்படுதல் குறித்து இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்பட வில்லை  என்று கோப் குழுவின்  தலைவரான சரித்த ஹேரத் இன்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பொது நிறுவனங்கள் தொடர்பான அமர்வுகளுக்கு ஊடகங்கள் தொடர்ந்தும் அனுமதிக்கப்படாது என்று ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இவ் விடயம் குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள  கோப் குழுவின் கூட்டத்தில் முன்னெடுக்கப்படும் என கோப் குழுவின்  தலைவரான சரித்த ஹேரத் தமது டுவிட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளார்.