இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். உடல்நலக்குறைவால் இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி தனது, 82 வயதில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

30 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சருமாக இருந்தவர் ஜஸ்வந்த் சிங். வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக்காலத்தில் வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் நிதித்துறை பொறுப்புகளை வகித்த ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.  

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  தேசத்திற்காக விடா முயற்சியுடன் பணியாற்றியவர். அரசியலில் பாஜகவை வலுப்படுத்துவதில் முக்கியமான தலைவர். அரசியல் மற்றும் சமூக விவகாரங்களல் தனித்துவமான கண்ணோட்டத்திற்காக அவர் என்றும் நினைவுகூறப்படுவார்’ என குறிப்பிட்டுள்ளார்.