இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து விட்டது. தற்போது பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இல்லை. குறித்த சட்டம் நீக்குமாறு கோருவதற்கு அமெரிக்காவிற்கு தகுதி கிடையாது. துருக்கியில் இராணுவ புரட்சியை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமெரிக்காவிற்கு இலங்கை பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எவ்வாறு கேள்வியெழுப்ப முடியும்  என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கேள்வியெழுப்பினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழுத்தம் கொடுப்பதனை எங்களால் நிராகரிக்க முடியாது. ஏனெனில் சர்வதேசத்திற்கு கொடுதத் வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஆட்சியில் அமெரிக்க அழுத்தம் கொடுப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் வினவிய போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.