முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் காணப்படுகின்ற குளங்களின் கீழுள்ள வயல் காணிகளுக்கான ஆவணங்களை  வைத்திருக்கின்ற நபர்களை எதிர்வரும் 14 நாட்களுக்குள் (11.10.2020‌ ற்கு முன்னர்) தம்மிடம் பதிவு செய்யுமாறு பனிக்கன்குளம் கமக்கார அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

14 நாட்களுக்குள் பதிவு செய்யுங்கள் - விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு - Ibctamil

பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள பனிக்கன்குளம் நாவிக்குளம், குஞ்சுமுறியாக்குளம், விளாத்திகுளம், கிழவன்குளம் ஆகிய ஐந்து குளங்களின் கீழ்  உள்ள வயல் நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் 14 நாட்களுக்குள் (11.10.2020 ற்கு முன்னர்) பனிக்கன்குளம் கமக்கார அமைப்பில் பதிவு செய்யுமாறும் தவறும் பட்சத்தில் இதுவரை காலமும் செய்கை பண்ணப்படாத கமக்கார அமைப்பிடம் பதிவு செய்யப்படாத வயல் நிலங்கள் கிராமத்தில் வயல் நிலங்கள் அற்ற மக்களுக்கு செய்கை பண்ணுவதற்கு வழங்குவதற்காக அமைப்பினுடைய பொது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது 

இந்த தீர்மானத்திற்கு அமைவாக குறித்த ஐந்து குளங்களின் கீழும் காணி ஆவணங்களை வைத்திருக்கின்ற காணி உரிமையாளர்கள் 14 நாட்களுக்குள்    (11.10.2020 ற்கு முன்னர்)  பனிக்கன்குளம் கமக்கார அமைப்பில் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் கமக்கார அமைப்பு  புதிய நிர்வாகத் தெரிவு கூட்டம் நேற்றைய தினம் பனிக்கன்குளம் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து 

பனிக்கன்குளத்தில் வயல் நிலங்களற்ற மக்களுக்கான வயல் நிலங்களை வழங்குமாறு பொதுமக்களால் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது

இதன்போது கிராம மக்கள் பனிக்கன்குளத்திலுள்ள குறித்த ஐந்து குளங்களின் கீழும் உள்ள செய்கை பண்ணப்படாத  காணிகள்  இருப்பதாகவும்  அதனை வயல் நிலங்கள் அற்று இருக்கின்ற  தமக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கோரிய நிலையில் குறித்த பொது குழுவினால்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே காணி உரிமையாளர்களுக்கு பொது அறிவித்தல் ஒன்றை கொடுக்குமாறும் 14 நாட்களுக்குள் அவர்கள் குறித்த காணி தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ளாத பட்சத்தில் குறித்த காணிகளை பொதுமக்களுக்கு செய்கை பண்ணுவதற்கு வழங்குகின்ற தீர்மானத்தை பொதுச்சபை மேற்கொண்டுள்ளது

எனவே எதிர்வரும் 14 நாட்களுக்குள் குறித்த குளங்களின். கீழ்  உள்ள வயல்களுக்கு சொந்தக்காரர்கள் ஆவணங்கள் உடன் பனிக்கன்குளம் கமக்கார அமைப்பை தொடர்பு கொண்டு தங்களது காணி ஆவணங்களை சமர்ப்பித்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு அமைப்பு தெரிவித்திருக்கின்றது 

மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு அமைப்பின் தலைவர் 0776354841அல்லது அமைப்பின் செயலாளர் 0768947121 உடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.