யாழ். குருநகரில் வீடுடைத்து கொள்ளை ; 17 வயது இளைஞன் சிக்கினார்

27 Sep, 2020 | 06:41 AM
image

யாழ்ப்பாணம், குருநகரில் வீட்டில் யாரும் இல்லாத போது, வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிட்ட 17 வயது இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் நகைகளை வாங்கி அடகு வைத்த ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், கொள்ளையடித்த நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 17ஆம் திகதி முற்பகல் இடம்பெற்றது.

வீட்டில் இருந்தவர்கள் வேலைக்குச் சென்றிருந்த வேளை, வீடுடைத்து நகைகள் கொள்ளையிடப்பட்டன.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

திருநகரைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார். 

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்துக் கொடுத்த மற்றொருவரும் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் இருவரும் இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம், குருநகர், கொள்ளை, இளைஞன் கைது, பொலிஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02