'இந்தியா எப்போதும் இலங்கைக்கு முன்னுரிமை கொடுக்கிறது': பிரதமருடனான இணையவழி உச்சிமாநாட்டில் மோடி..!

Published By: J.G.Stephan

26 Sep, 2020 | 04:50 PM
image

புதுடில்லி, இந்தியாவின் 'அயலகத்திற்கு முன்னுரிமை' என்ற அதன் கொள்கையின் கீழும்  (Neighbourhood First Policy)  பிராந்தியத்திலுள்ள சகலருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற கோட்பாட்டின் கீழும் (Security and Growth for All in the Region)  இலங்கைக்கு எப்போதுமே முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறது என்று இன்று சனிக்கிழமை கூறியிருக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஆயிரக்கணக்கான வருடங்கள் பழைமையானது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்றுகாலை இணையவழி மூலமாக உச்சிமாநாடொன்றை நடத்திய மோடி, இந்தக் கலந்துரையாடலுக்கான தனது அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு இலங்கைத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார். 'இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் பழைமை வாய்ந்தவை. எனது அரசாங்கத்தின் அயலகத்திற்கு முன்னுரிமை என்ற கொள்கை மற்றும் பிராந்தியத்திலுள்ள சகலருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற கோட்பாட்டின் கீழும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு நாம் எப்போதும் விசேட முன்னுரிமை கொடுக்கிறோம்' என்று மோடி கூறினார்.

'இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இந்த இணையவழி இருதரப்பு உச்சிமாநாட்டிற்கான எனது அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு  உங்களுக்கு  (மஹிந்த ராஜபக்ஷ) நன்றி. நீங்கள் மீண்டும் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காகவும் உங்கள் கட்சி பாராளுமன்றத்தேர்தலில் பெற்ற பெருவெற்றிக்காகவும் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்' என்றும்
பிரதமர் மோடி தெரிவித்தார்.

இத்தகைய இணையவழி இருதரப்பு உச்சிமாநாட்டை அயல் நாடொன்றுடன் பிரதமர் மோடி நடத்துவது இதுவே முதற்தடவையாகும். 2020 ஆகஸ்ட் 9 ஆம் திகதி பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட பிறகு வெளிநாட்டுத்தலைவர் ஒருவருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடத்துகின்ற முதலாவது இராஜதந்திர கலந்துரையாடல் இதுவாகும்.

இந்த இணையவழி உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கடந்த வருடம் நவம்பரில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் இவ்வருடம் பெப்ரவரியில் பிரதமர் மஹிந்தவும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36