(க.கிஷாந்தன்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் அன்றூஸ் தோட்டத்தில் குடும்பமொன்றில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக தாக்கப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் கொட்டகலை வைத்தியசாலையில் இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடே இதற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்தோடு குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு அதன்பின் கைகலப்பாக மாறியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளாகிய நபர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.