(நமது நிருபர்)

செப்டெம்பர் 28 ஆம் ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு சுந்திர ஊடக இயக்கமானது  இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில்  கலந்துரையாடல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. 

நாளை மறுதினம் திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு மேற்படி ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இக்கலந்துரையாடல் நிகழ்வானது ‘தகவல் அறியும் உரிமை சட்டம்; சாதனைகளும் சவால்களும் ‘ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது. 

இலங்கை தகவல் அறியும் ஆணைக்குழுவின் தீர்மானங்களை முன்வைத்து சட்டத்தரணி அஸ்வினி நடேசன் வீரபாகு உரையாற்றவுள்ளார். மேலும் இச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தகவல்களை வைத்து செய்தி அறிக்கையிட்ட ஊடகவியலாளர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வர். 

இதில் ஊடகவியலாளர்களான ராகுல் சமந்த ஹெட்டிராய்ச்சி, சிவலிங்கம் சிவகுமாரன் மற்றும் இதுனில் உஸ்கொட ஆராய்ச்சி ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.