(இராஜதுரை ஹஷான்)

இலங்கை அரசியல்  தன்மைக்கு பொருத்தமற்ற  ஏற்பாடுகளையே  அரசியமைப்பின்  19 ஆவது திருத்தம் கொண்டிருந்தது. நல்லாட்சி அரசாங்கம் பலவீனமடைவதற்கு இத்திருத்தமே  மூல காரணியாக அமைந்தது.

அரச நிர்வாகத்தில் அரசியமைப்பு    தடையாக  இருக்க கூடாது என்பதற்காகவே  20 ஆவது திருத்தம் மாறுப்பட்ட பல விடயங்களை  கொண்டுள்ளது என நுவரெலியா மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு தலைவர். எஸ். பி  திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியமைப்பின்  19 ஆவது திருத்தத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  நல்லாட்சி  அரசாங்கத்தின் இலட்சினம் என பெருமைக் கொண்டார்.

திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட  ஏற்பாடுகள் செயற்படுத்தப்படும் போது அதன்  விளைவுகள்  முத்துறைக்குமிடையில் அதிகார முரண்பாட்டை தோற்றுவித்தது. இறுதியில் அவரே  19 ஆவது திருத்தத்தை  சாபக்கேடு என விமர்சிக்க ஆரம்பித்தார்.

19  ஆவது  திருத்தம் இலங்கை அரசியல்   தன்மைகளுக்கு பொருத்தமற்ற  ஏற்பாடுகளை கொண்டிருந்தது. திருத்த ஏற்பாடுகள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ரசனையாக காணப்பட்டது. ஆனால் நடைமுறை அரசியலுக்கு பொருத்தமற்றதாக இருந்தது என்பதை     அனுபவ ரீதியில்   கடந்த அரசாங்கத்தின்  முக்கிய  தரப்பினர்கள்  உணர்ந்துக் கொண்டார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.