இலங்கை சங்கமன்கண்டி இறங்குதுறையிலிருந்து 37 கடல்மைல் தொலைவில் விபத்துக்குள்ளான எம்.டி.நியூ டயமண்ட் என்ற பனாமா நாட்டுக்கப்பலின் உரிமையாளர்களிடம் தீயணைப்பு செலவீனங்களாக முதலில் 342 மில்லியன் ரூபாவை இலங்கை அரசு கோரியிருந்தது. 

இதனை கப்பல் உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து மேலும் சூழல் பாதுகாப்பை சீர்குலைத்தமைக்கான நஷ்ட ஈடாக 100 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டுமென சட்டமா அதிபர் திணைக்களம் கோரியிருந்தது.

இதனையும் கப்பல் உரிமையாளர் ஏற்று, முழுமையாக இலங்கைக்கு 442 மில்லியன் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குவதற்கு தயாரென அவர்களின் சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்துள்ளனர்.