மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று  அஞ்சலி செலுத்தியுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் வைக்கப்பட்டு, அவரது குடும்பத்தினர் சார்பில் அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. 

திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், பாடகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இதனிடையே நடிகர் விஜய் அங்கு சென்று எஸ்.பி.பி.யின் மகன் சரண் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

விஜய்யின் பிரியமானவளே படத்தில் அவரது தந்தையாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.