இலங்கையின் அத்திவாரமான விவசாயத்தை பலமாக்குவதில் பெருமிதம் கொள்ளும் ஒரு வங்கியான சம்பத் வங்கி, விவசாயத்துக்கு முழுகெழும்பாக விளங்கும் குளங்களுக்கு உயிரூட்டும் வகையில் வகையிலான புனர்நிர்மானப்பணிகளை நாடுமுழுவதும் முன்னெடுத்து வருகின்றது. 

குளங்களின் மகத்தான மதிப்பை நன்கு அறிந்துள்ள சம்பத் வங்கி 'வேவட ஜீவயக்” (குளத்துக்கு உயிரூட்டும்) செயற்திட்டத்தின் மூலம் இலங்கையின் பண்டைய மன்னர்களால் கட்டப்பட்ட பாரம்பரிய நீர்ப்பாசன அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

விவசாயத்தை வலுவூட்டும் 'வெவட ஜீவயக்” செயற்திட்டமானது, சம்பத் வங்கி பி.எல்.சியின் சமூக நல மேம்பாட்டு திட்டங்களின் ஒரு பகுதியாகும். வறள் மண்டல விவசாயிகளின் நெற்பயிர்ச் செய்கைக்கு உதவிசெய்வதோடு விவசாய நிலங்களில் வருடாந்தம் யால மற்றும் மஹா நெற்பருவங்களில் நெல் பயிரிடுவதற்கும், அறுவடை செய்வதற்கும் தேவையான நீர் விநியோகத்தை உறுதி செய்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தினால் விவசாயம் மூலம் நிலையான வாழ்வாதாரத்தை பராமரிப்பதற்கான சாத்தியமான வழிமுறையாக இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதையும் வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இப்பகுதியிலுள்ள சமூகத்தின் வாழ்க்கையை வளமாக்குவது, குளத்தின் நீர் திறனை மேம்படுத்துவது மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவது, விவசாய தொழில்முனைவோரை நிதி ரீதியாக உள்ளடக்கியதாக மாற்றுவதன் மூலம் அவர்களுக்கான அதிகாரத்தை அளிப்பது போன்ற மூன்று அடிப்படை விடயங்களுக்கு சம்பத் வங்கி பங்களிக்கிறது.

கைவிடப்பட்ட மற்றும் அழிவை சந்தித்த குளங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட முயற்சியாக விளங்கும், ‘வேவட ஜீவயக்’ திட்டம் இன்றுவரை ஏழு குளங்களை மீட்டெடுத்துள்ளது. லுனுகம்வெஹரவிலுள்ள உடமத்தல குளம் (2001), தனமல்விலுள்ள இலுக்பெலஸ்ஸ குளம் (2002), ஹம்பாந்தோட்டையிலுள்ள கொங்கெட்டியாரா குளம் (2002), பண்டுவஸ்நுவரவிலுள்ள தேமடவா குளம் (2014), நொச்சியகமவிலுள்ள ஹல்மில்லகுலம (2017) கஹாடகஸ்திகிலியவிலுள்ள அம்பகா குளம் திவலுங்கடவெலவிலுள்ள தான்ய குளம் (2018) ஆகியவற்றை இத்திட்டத்தின் மூலம் புனரமைத்துள்ள சம்பத் வங்கி தனது சமீபத்திய புனரமைப்பு திட்டமாக பிபிலிலுள்ள கிண்டகல்ல குளத்தை புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. 

மொனராகலை மாவட்டத்தின் கொகுனேவ பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கிண்டகல்ல குளம், தற்போது 62 ஏக்கர் நெல் நிலங்களுக்கான நீரை வழங்கிவருகின்றது. இதனால் 60 விவசாய குடும்பங்கள் பயனடைகின்றன. புனரமைப்பு செயற்பாடுகளின் பின்னர் 262 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீரை வழங்கும் குளமாக இது மாறிடும். இதனால் 260 குடும்பங்கள் நேரடியாக பயனடையும். மொனாரகலையில் உள்ள விவசாய மேம்பாட்டுத் துறையின் மேற்பார்வை மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் கீழ் இந்த புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 

இந்தத் திட்டத்தின் மீதான ஆசீர்வாதத்தை பெறுவதற்காக பல கலாச்சார மற்றும் மத அனுஸ்டானங்களுடன் கூடிய ஆரம்பவிழா அண்மையில் நடைபெற்றது. கிராம விகாரையின் தலைவர்களால் “பிரித்” உச்சாடங்களுக்கு மத்தியில் ஆரம்பவிழாவானது இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் சம்பத் வங்கியின் பிரதிநிதிகள், அப்பகுதியைச் சேர்ந்த பல அரசு அதிகாரிகள், வாடிக்கையாளர்கள், விவசாயிகள், சங்க உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர். .

இந்நிகழ்வின் போது, ‘வெவட ஜீவயக்’ திட்டத்தைப் பற்றி பேசிய சம்பத் வங்கி பி.எல்.சியின் பிரதான மனிதவள அதிகாரியான துசிதா நகண்டலா, “இந்த குளங்களை புனரமைக்கும் முழுச் சுமையையும் கிராம மக்கள் சுமப்பது சவாலானது. இந்த பணிக்கு நிறைய பொறுப்பு தேவைப்படுகின்றது. அத்துடன் இதுபோன்ற ஒரு நுணுக்கமான செயல்முறை, அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையிலும் வாழ்வாதாரத்திலும் தாக்கத்தை செலுத்தலாம்.  ஆரம்பத்தில் இருந்தே, நாடுமுழுவதும் உள்ள குளங்களை மீட்டெடுக்க அரசாங்க அதிகாரிகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். வேளாண் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியுடன் சேர்ந்து, இக்குளங்களை மீட்டெடுப்பதில் பெருமிதம் கொள்கிறோம், இத்திட்டத்தின் மூலம் அப்பகுதியிலுள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு வரலாற்று மற்றும் பயனுள்ள நீர்ப்பாசன முறைக்கு திரும்பவும் உதவுகிறது.” என தெரிவித்தார். 

தற்போது, இக்குளக்கட்டையானது சேதமடைந்துள்ளதுடன் இரு பருவங்களுக்கும் தேவையான நீர் திறனை பராமரிக்க குளக்கட்டையின் உயரம் போதுமானதாக இல்லை. மேலும், குளத்தின் வடிகால் அமைப்பும் சேதமடைந்துள்ளது. இதனால் குளத்தின் நீர் கொள்ளும் திறன் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. குளத்தின் அகழ்வாராய்ச்சி மற்றும் குளக்கட்டை மற்றும் வடிகால்களை புனரமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய மறுசீரமைப்பு பணிகளை முன்னெடுக்க சுமார் மூன்று மாதங்களாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பத் வங்கியின் சமூக நல பொறுப்புணர்வு நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்யும் அதேவேளை சமூகத்திற்கும் நாட்டிற்கும சேவை செய்வதற்கும் அதன் குடிமக்களுக்கும் நிலையான நன்மைகளை உருவாக்குவதற்கும் ஒரு வலுவான அர்ப்பணிப்பை மேற்கொண்டு வருகின்றது.

சமூக நல பொறுப்புணர்வு செயற்பாடுகளை (CSR) ஒரு ஆழமான அம்சமாக கருதும் சம்பத் வங்கி, சாதாரண வணிகப் போக்கில் அதன் செயல்பாடுகளை நிர்வகித்து இயற்கையான கடமைகளுக்கு மேலேயும் அதற்கு அப்பாலும் தொடர்ந்து தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றது. வங்கி மற்றும் நிதிகளில் நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவம் மற்றும் நிபுணத்துவத்துடன், சம்பத் வங்கியின் சமூக நல பொறுப்புணர்வு செயற்பாடுகள் பொருளாதார வளர்ச்சி, தனிநபர் முன்னேற்றம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது.