40 மலையக இளைஞர், யுவதிகளால் மலையக தமிழ் மக்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் 100 புகைப்படங்களை உள்ளடக்கிய "தேயிலைச் சாயம்" புகைப்படக் கண்காட்சி இன்று கொழும்பில் கொவிட்-19 கொரோனா தொற்று சுகாதார வழிகாட்டுதல் ஆலோசனைகளின் கீழ் ஆரம்பமானது.

அதன்படி இக் கண்காட்சியானது இன்றும் நாளையும் காலை 10.00 தொடக்கம் மாலை 6.00 மணி வரை கொழும்பு 07, லயனல் வென்ட் கலை நிலையத்தில் (Lionel Wendt Theatre Premasiri Khemadasa Mawatha, Colombo 07) மணிக்கு நடைபெறும்.

அதனால் குறித்த புகைப்படக் கண்காட்சியை வந்து பார்வையிடுமாறு அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Strengthening Reconciliation Processes in Sri Lanka (SRP),நிறுவனம் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், ஊவா சக்தி நிறுவனம், மலையகத் தமிழ் இளைஞர் யுவதிகளைப் போலவே தமிழ் சமூகம் இந்த புகைப்படக் கண்காட்சிக்கு செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கியதோடு நீண்டகாலச் செயற்பாட்டின் பெறுபேறாக இந்த புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.

இது தொடர்பில் மேற்கண்ட ஏற்பாட்டுக் குழுவினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

நீங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும்போதுதொலைக்காட்சியைப் பார்க்கும்போது அல்லது ஓய்வாக இருக்கும்போது ஒரு தேநீர் கோப்பையை சுவைக்கின்றீர்களா?

அது உங்களுக்கு எவ்வளவு இனிமையை சுகத்தைக் கொடுக்கிறது? ஆனால் இந்தச் சுவையான தேநீர் கோப்பையின் சுவையின் அடியில் உள்ள கண்ணீரின் கதையை நீங்கள் அறிவீர்களா? தேநீர் கோப்பைக்காக கஷ்டப்படும் சகோதர மக்களைப் பற்றி நீங்கள் ஒரு நொடிப்பொழுது யோசித்தீர்களா?

அந்தத் தேநீர் கோப்பையில் மறைந்திருக்கும், மலையக மக்களின் வாழ்க்கையை, நாம் இப்புகைப்படக் கண்காட்சியின் ஊடாகப் படம்பிடித்துக் காட்டுகின்றோம்.

மலையக அடையாளத்தைக் கொண்ட சமூகம் இலங்கைக்கு வருகை தந்தது முதல், இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இச் சமூகம் வழங்கும் பங்களிப்பை விலை மதிக்க முடியாது.

'சிலோன் ரீ ' அல்லது இலங்கைத் தேயிலை உற்பத்தி காரணமாகவே இலங்கையை உலகு அறிகிறது. ஆனால் தொடர்ந்தும் தேயிலைக் கொழுந்து பறித்தல், தேயிலைச் செடிகளைக் கவாத்து வெட்டுதல், பசளையிடுதல் போன்ற அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் தோள் கொடுக்கும் மலையகத் தமிழ் மூகத்தின் வாழ்க்கை நிலைமை மேம்படவில்லை. 

அனேக அரசியல், பொருளாதார, சமூக விடயங்களைப் பொருத்தவரை அவர்களுக்கு உரித்தான இடம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையைப் மீளப் பெறுவதற்கான சக்தி அவர்களுக்கு உண்டு.

இச் சமூகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கவிதைகளும் பாடல்களும் பல்வேறு படைப்புக்களும் ஏராளம். அவற்றில் அனேகமான படைப்புக்கள் அனுதாப மனப்பாங்குடன் புதிய அரசியல் மறுசீரமைப்புக்களுக்காக சமூக அறிவினை விரிவாக்குவதில் வெற்றி கண்டுள்ளன. 

மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையின் குறுக்கு வெட்டை காட்சிப்படுத்துவதே இப்புகைப்பட கண்காட்சியின் முக்கிய குறிக்கோளாக அமைந்துள்ளது. அதாவது அவர்களின் சமூக, அரசியல்,  பொருளாதார மற்றும் கலாசார வாழ்வு பற்றிய சமூக உணர்வை வழங்குவதன் மூலம் அவர்களுடைய யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகும்.

மலையகப் பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நான்கு பெருந்தோட்டங்களைச் சார்ந்த இளைஞர்களும் யுவதிகளும் படம்பிடித்த புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. 

நுவரெலிய மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஹொலிருட் மற்றும் லொகி பெருந்தோட்டங்களும், பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஊவா ஹைலன்ட் மற்றும் அட்டம்பிடிய ஆகிய பெருந்தோட்டங்களின் இளைஞர்களும் யுவதிகளும் இதன்போது பங்களிப்புச் செய்துள்ளனர்.

சுமார் ஓராண்டு காலம், சில செயலமர்வுகள் ஊடாக புகைப்படப்பிடிப்பு பற்றிய தொழில்நுட்ப அறிவையும் கலை மற்றும் சமூக அரசியல் அறிவையும், சமூக மாற்றத்திற்கான கலையைப் பயன்படுத்துவது பற்றிய அறிவையும் பெற்றுக்கொண்டு அவர்களுடைய சமூக வாழ்வு அவர்களாலேயே கமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது ஆய்வு ரீதியான நிகழ்ச்சித்திட்டமாகும். சமூக அறிவினை இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வழங்கி அவர்களுடைய வாழ்க்கையில் யதார்த்தத்தை ஆய்வு செய்தல் இதன் மூலம் இடம்பெறுகிறது. 

சிறந்த சமூக வாழ்வை உதயமாக்குவதற்கு அவசியமான நடைமுறை அனுபவத்தைப் பெறுவதற்கு இது காரணமாக அமைகிறது. அதே சமயம் மலையகத் தமிழ் சமூகத்தின் வாழ்க்கை மீது மூன்றாம் கண் கொண்டு அவதானிப்பதனூடாக அறிவினைப் பெறுவதும் குறிப்பிட்டதொரு கலந்துரையாடலுக்கான வழிகாட்டலுக்கும் இது உதவியாக இருக்கிறது.

அத்தோடு மலையக தமிழ் மக்களின் வாழ்வினை மூன்றாம் கண்ணோட்டத்தில் கண்கானிப்பதன் செய்வதன் ஊடாக சமூக உணர்வை பெறுவதற்கான சந்தர்ப்பம் உருவாகும்.

மேலும் சிறந்த சமூக வாழ்க்கையைப் பெறுவதன் ஊடாக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மலையக தமிழ் சமூகம் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை செய்தமை பற்றியும் இது தொடர்பான ஒரு கலந்துரையாடலை உருவாக்குவதற்கும் இக் கண்காட்சியினூடாக வழி சமைக்க முடியும்.

இலங்கையில் பிரசித்திபெற்ற இரண்டு புகைப்படக் கலைஞர்களான நதிஷ்க்க ரணசிங்க, அஜித் செனெவிரத்ன ஆகிய இருவரும் மலையக இளைஞர் யுவதிகளுடன் தொடர்புகொண்டு, புகைப்படம் எடுத்தல் பற்றிய அறிவையும் தேர்ச்சியையும், மேற்படி இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பயிற்சி வழங்கினர்

இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக்குவதற்கு மலையக இளைஞர்களும் யுவதிகளும் அவர்களுடைய சமூகமும் தமது பங்களிப்பை செய்துள்ளனர்.  அதே சமயம் இது ஒரு கூட்டு நடவடிக்கையாகும். 

Strengthening Reconciliation Processes in Sri Lanka (SRP),நிறுவனம் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், ஊவா சக்தி நிறுவனம், மலையகத் தமிழ் இளைஞர் யுவதிகளைப் போலவே தமிழ் சமூகம் இதன்பொருட்டு செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கியதோடு நீண்டகாலச் செயற்பாட்டின் பெறுபேறாக இந்த புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.

இக் கண்காட்சியானது 40 மலையக இளைஞர் யுவதிகளினால் எடுக்கப்பட்ட 120 புகைப்படங்களை கொண்டு இம் மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் அதாவது வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கொழும்பு 07 இல் அமைந்துள்ள (Lionel Wendt Theatre Premasiri Khemadasa Mawatha, Colombo 00700) காலை 10.00 முதல் காட்சிப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

அத்துடன் கண்காட்சி நடைபெறும் தினங்களில் மாலை 4.00 மணிக்கு இப் புகைப்படங்கள் மற்றும் மலையக மக்களின் வாழ்வியல் தொடர்பாக முன்னெடுக்கவிருக்கும் கலந்துரையாடலிலும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்போடு அழைக்கின்றனர்.

மலையக தமிழ் மக்களின் வாழ்வியலை மூன்றாம் கண்னோட்டத்தில் உணர்வுப் பூர்வமாக அவதானிப்பதன் ஊடாக அவர்களின் வாழ்வியலின் போக்கினை எம்மால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதுடன் ஆரரோக்கியமான கொள்கை ரீதியான கலந்துரையாடலை ஏற்படுத்துவதற்கு இக் கண்காட்சி வழிவகுக்கும். 

மலையக தமிழ் மக்களின் வாழ்வியலை சமூகமயப்படுத்தல் மற்றும் அதனூடாக அவர்களின் பிரச்சினைகளுக்கு திர்வினை காணும் நோக்கில் கொள்கை ரீதியிலான கலந்துரையாடலை ஏற்படுத்துவது உங்களின் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.