வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி வெடிமருந்துகள் வைத்திருந்த  சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

தென் மாகாணத்தின் கொக்கலாவையைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தவகையில் சந்தேக நபர் குறித்த துப்பாக்கியை மற்ற ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட பின்னரே இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு சந்கேத நபரை விசாரணைக்கு உட்படுத்திய பின்பு அவரின் வீட்டுத் தோட்டத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

எனினும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.