காந்தக்குரலோன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உடல்நலக்குறைவால் நேற்று வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணிக்கு உயிரிழந்த நிலையில், அவரது உடல் இன்று சனிக்கிழமை 12 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், எஸ்.பி.பி.யின் உடலுக்கு இன்று காலை 7 மணி முதல் காலை  10 மணி வரை அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகளை பொலிஸார் செய்து இருந்தனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல், சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்லத்தின் வளாகத்தில் சற்றுமுன்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழக அரசு அறிவித்தப்படி காவல்துறை மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம் இடம்பெற்றது.

கண்ணீர் மல்க குடும்பத்தினர், உறவினர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் எஸ்.பி.பி.யின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தி வழியனுப்பினார்கள்.

நடிகர் விஜய் நேரில் அஞ்சலி