முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலிலும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலின் இறுதி நாளான இன்று (26)அடையாள உண்ணாவிரதம் இடம்பெற்று வருகின்றது.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை கோரி இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தியாக தீபம் திலீபனின் வழியில் இடம்பெற்று வருகின்றது.

பொலிஸார் மற்றும் அரச புலனாய்வு பிரிவினரின் கெடுபிடிகளுக்கும் கண்காணிப்புகளுக்கும்  மத்தியில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் சத்தியலிங்கம், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

புரட்டாதி சனி விரதம் இன்றைய நாளில் அனுஷ்டிக்கபட்டு வரும் நிலையில் ஆலயத்துக்கு அதிகளவான மக்கள் வருகைதருகின்ற நிலையில் இந்த உண்ணாவிரதம் முன்னெடுக்க பட்டு வருகின்றது.