கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 187 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய 122 பேர் இந்தியாவில் இருந்தும்  , 58 பேர் கட்டாரில் இருந்தும்  , 7 பேர் அபுதாபியில் இருந்தும் இன்று காலை விசேட விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் அவர்ளுக்கான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.