கன்னட முக்கிய சினிமா பிரமுகர்களுடன் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான அனுஸ்ரீக்கு மங்களூர் குற்றப்பிரிவு பொலிசார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.

போதைப்பொருளை பயன்படுத்தியது, அதனை வாங்கி வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை ஏபிசிடி படத்தில் நடித்திருந்த நடன இயக்குனர் கிசோர் செட்டி கடந்தவாரம் கைது செய்யப்பட்ட நிலையிலேயே நடிகை அனுஸ்ரீ கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏபிசிடி படத்தில் நடித்திருந்த நடன இயக்குனர் கிசோர் செட்டி, நடத்திய நிகழ்வுகளில் அனுஸ்ரீ கலந்து கொண்டமை பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கிசோரின் செயல்பாடுகள் குறித்து நடிகை அனுஸ்ரீக்கு தெரிந்திருக்கலாம் என கருதி, அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.