பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் இடத்தை எவராலும் நிரப்ப இயலாது என்று தன்னுடைய இரங்கல் குறிப்பில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்திருப்பதாவது,

'என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தீர்கள். உங்கள் குரலும் நினைவுகளும் என்றென்றும் என்னுடன் வாழும். நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன். நம்முடன் இனி எஸ்பிபி இல்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

எஸ்பிபி பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை. அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள். எஸ் பி பாலசுப்ரமணியத்தின் இடத்தை இனி எவராலும் நிரப்ப இயலாது' என தெரிவித்துள்ளார்.

எஸ்பி பாலசுப்ரமணியம் இறுதிச்சடங்கு அவருடைய பண்ணை வீடான சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் தாமரைபாக்கத்தில் நடைபெறுகிறது.