சூடானுக்கு ஐ.நா எச்சரிக்கை

By T. Saranya

26 Sep, 2020 | 11:17 AM
image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் மனிதாபிமான தொழிலாளர்கள் நடவடிக்கைகளைத் தொடர நிதி இல்லாமல் போகும் அபாயத்தில் உள்ளனர். 

ஐக்கிய நாடுகள் சபை, கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் சூடான் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

பெய்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் ஏறக்குறைய 830,000 மக்கள்பாதிக்கப்பட்டுள்ளதோடு, 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் என சூடான் அரசாங்கத்தின் மனிதாபிமான உதவி ஆணையத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு இலட்சம் வீடுகளை அழிந்துள்ளதோடு, அறுவடைக்கு சற்று முன்னர் விளைநிலங்களின் பெரிய பகுதிகள் சேதமடைந்துள்ளதாக சூடானில் உள்ள மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA)  தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களாக சூடானின் மிக மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

வட டார்பூர், கார்ட்டூம், வெஸ்ட் டார்பூர் மற்றும் செனார் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களாகும். இங்கு பாதிக்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளார்கள்.

நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மற்றும் பல சுகாதார சேவைகள் சேதமடைந்துள்ளன. 

நாட்டிலுள்ள மனிதாபிமான தொழிலாளர்கள் அனைத்து மாநிலங்களிலும் 400,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு முக்கியமான உதவிகளை வழங்கியுள்ளனர். இருப்பினும், ஆயிரக்கணக்கான மக்களுக்கு இன்னும் முக்கிய உதவி தேவைப்படுகிறது, மேலும் அதிக நிதி அவசரமாக தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரேனில் கைப்பற்றிய பகுதிகளை இணைக்கிறது ரஷ்யா

2022-09-29 13:08:24
news-image

பாக்கிஸ்தான் பொலிஸார் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி-...

2022-09-28 16:04:03
news-image

தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு...

2022-09-28 16:02:57
news-image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு...

2022-09-28 15:11:59
news-image

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது...

2022-09-28 11:17:49
news-image

வீட்டுக் காவல் வதந்திக்கு பிறகு முதன்...

2022-09-28 10:44:04
news-image

ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு

2022-09-28 09:21:33
news-image

ஜின்ஜியாங்கில் தனது பாரிய மனித உரிமை...

2022-09-27 16:39:59
news-image

இந்தியாவில் தயாராகும் அப்பிள் கைத்தொலைபேசி

2022-09-27 15:29:19
news-image

போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல...

2022-09-27 12:55:09
news-image

ஒரு பாலின திருமணங்களை சட்டபூர்வமாக்கியது கியூபா

2022-09-27 15:37:18
news-image

சின்சோ அபேயின் இறுதிச் சடங்கு ;...

2022-09-27 12:17:39