யாழ்ப்பாணம், சாவகச்சேரி சிவன் கோவிலுக்கு முன்பாக தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இலங்கை அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

இப் போராட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்புகள் இணைந்துள்ளன. 

இதேவேளை, தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு இன்றையதினம் (26) தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு தடை உத்தரவு விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தால் நேற்றையதினம் உத்தரவிடப்பட்டிருந்தது.

கொரோனா சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Image may contain: 3 people, people standing, wedding and outdoor

இந்நிலையிலேயே அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக தடைகளை தாண்டியும் சாவகச்சேரி சிவன் கோவிலடியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள் ஆரம்பித்துள்ளன.

Image may contain: one or more people, people sitting, crowd and outdoor

Image may contain: 1 person, standing

Image may contain: one or more people and people standing

Image may contain: one or more people, crowd and outdoor