கண்டி - உடுதும்பர பகுதியில் சட்டவிரோதமான முறையில் புலி இறைச்சியை விற்பனை செய்ததாக தம்பதியினர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த சந்தேக நபர்களை தெல்தேனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்களை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
உடுதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலல்கமுவ பகுதியில் நேற்றைய தினம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக உடுதும்பர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பன்றிகளை வேட்டையிடும் நோக்கத்தில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கி உயிரிழந்திருந்த புலியை இவ்வாறு இறைச்சிக்காக விற்பனை செய்துள்ளனர்.
இந்நிலையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM