உக்ரைன் இராணுவத்தினருக்கு சொந்தமான அன்டனோவ்- 26 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர்  விமானப் படையினர் என தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நகரமான கார்கிவ் பகுதியில் தரையிறங்க முற்பட்டபோதே  குறித்த விமானம் விபத்துகுள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான விபத்து இடம்பெறும் போது விமானத்தில் 27 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 27 பேரில் 2 பேர் காயமடைந்துள்ள நிலையில் 03 பேர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்திற்கான காரணம் தெரியவாரத நிலையில், மேலதிக விசாரணைகளை உக்ரைன் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.