அவசர திருத்தப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பாகங்களில் இன்றைய தினம், 10 மணிநேர நீர்விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

அதன்படி, இன்று இரவு 8 மணிமுதல், நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிவரை, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் தடைப்படவுள்ளது.

இதேவேளை, கொழும்பு 11 பகுதியில், குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.