(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

புதிய இராஜதந்திர அதிகாரிகளாக பெயரிடப்பட்டிருந்த எட்டுப்பேரின் பெயர்களை அந்த பதவிகளுக்கு நியமிக்க உயர் பதவிகள் சம்பந்தமான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

சபாநாயகர் தலைமையில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு பாராளுமன்ற குழுவரையில் கூடிய கட்சி தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அடுத்ததாக கூடிய உயர் பதவிகள் சம்பந்தமான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதற்கமைய சி.எ சந்திர பிரேம ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாகவும்,  எஸ்.அமரசேகர தென்னாபிரிக்கவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராகவும், ஓய்வுபெற்ற அட்மிரல் கே.கே. ஹரிஸ்சந்திர சில்வா ஆப்கானிஸ்தானுக்கான இலங்கை தூதுவராகவும், விஸ்ராமால் சஞ்சீவ் குணசேகர  ஜப்பானுக்கான இலங்கையின் தூதுவாராகவும், மிலிந்த மொரகொட இந்தியாவுக்கான புதிய இலங்கை உயர் ஸ்தானிகராக,  ரவிநாத் ஆரியசிங்க அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராகவும், பேராசிரியர் செனிகா ஹிரிபுரேகம  பிரான்ஸ்சுக்கான இலங்கை தூதுவராகவும், கலாநிதி பாலித கொஹன சீனாவுக்கான இலங்கை தூதுவராகவும் நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.