டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்காக டெல்லி அணி களமிறங்கவுள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறும் 7 ஆவது போட்டியானது ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியானது துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதனாத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சென்னை மற்றும் டெல்லி அணிகள் ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை 21 முறை ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. அதில் சென்னை அணி 15 வெற்றிகளையும், டெல்லி அணி 6 வெற்றிகளையும் பெற்றுள்ளது.