மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய முகாமையாளராக ஜோயல் கார்னர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மூன்று வருடகால ஓப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய அணியுடனான தொடரிலிருந்து தனது பணியை ஆரம்பிக்கவுள்ளார்.

63 வயதான ஜோயல் கார்னர்  2009 தொடக்கம் 2010 ஆண்டுவரை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் பணிப்பாளராக பணியாற்றியுள்ளதோடு , பார்படோஸ் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணியின்  முகாமையாளராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஜோயல் கார்னர்  தெரிவிக்கையில் மீண்டும் அணியில் முகாமையாளராக இணைந்துக்கொண்டமை சந்தோஷமளித்துள்ளதாகவும், தனது அனுபவம் மற்றும் திறமைகளை அணியுடன் பகிர்ந்துக்கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பமாக இதனை கருதுவதாக தெரிவித்தார்.

ஜோயல் கார்னர் 1977 தொடக்கம் 1987 வரையான காலப்பகுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 98 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.