சீனாவின் கிழக்கு நகரமான கிங்டாவோவில் உள்ள சுகாதார அதிகாரிகள் கடல் உணவு இறக்குமதியாளரால் சேமிக்கப்பட்ட சில பொதிகளில் கொரோனா வைரஸ் காணப்படுவதை கண்டறிந்துள்ளனர். இதனால் அதனை கையாளும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிரூட்டப்பட்ட உணவு இறக்குமதி தொடர்பான சோதனைகளை சீனா முடக்கிவிட்டு, உலகளாவிய தொற்றுநோய்களுக்கு மத்தியில் சில வெளிநாட்டு இறைச்சி பதப்படுத்தும் ஆலைகளில் இருந்து இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது.

வியாழக்கிழமை நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழக்கமான கொரோனா சோதனையின்போது,பாதிக்கப்பட்ட இரண்டு ஆண்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 147 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்று கிங்டாவோ நகராட்சி சுகாதார ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இறக்குமதியாளரின் தயாரிப்புகளில் 51 கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது, ஆனால் தொற்றுக்குள்ளான எந்தவொரு தயாரிப்புகளும் சந்தைக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான குளிரூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் நிறுவனங்களின் இறக்குமதியை ஒரு வாரம் நிறுத்தி வைப்பதற்கு சீனாவை அச்சுறுத்தியுள்ளன.

ஜூன் மாதத்தில் கொரோனா தொற்று பரவிய இடமாக இருந்த தலைநகர் பெய்ஜிங்கில் ஒரு சந்தையின் இறைச்சி மற்றும் கடல் உணவுப் பொருட்களில் வைரஸின் கனமான தடயங்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.