பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் மேலும் ஆறு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 20 ஆவது திருத்த வரைபிற்கு எதிராக மொத்தம் 18 மனுத்தாக்கல்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுத்தாக்கல்கள் மீதான பரிசீலனை செப்டெம்பர் 29 ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந் நிலையில் இந்த பரீசிலனை நடவடிக்கைக்காக ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழமொன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.