20 வது திருத்தம் நீதித்துறை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை வலுவிழக்கச்செய்யும் - சர்வதேச மனித உரிமை அமைப்புகள்

25 Sep, 2020 | 03:53 PM
image

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமானால், அது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தும் அதேவேளை நீதித்துறை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தைப் பெரிதும் வலுவிழக்கச்செய்யும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

அதுமாத்திரமன்றி நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களில் மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய விதமாக அரசாங்கம் செயற்பட்டுவரும் நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 வது கூட்டத்தொடரில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் உத்தரவாதம் ஆகியவற்றை மேம்படுத்துதல் தொடர்பான ஐ.நாவின் முன்னாள் விசேட அறிக்கையாளர் பாப்லோ டி கிறீப்பினால் இலங்கை தொடர்பான விசேட அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஆசிய அமையம் உள்ளிட்ட 5 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றன. 

அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தமைக்காக ஐ.நா விசேட அறிக்கையாளருக்கு நன்றிகூறுகின்றோம். அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களுடன் தொடர்புபட்ட வகையில், அண்மைக்காலமாக இலங்கையின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் நிலைவரம் தொடர்பில் சில முக்கிய விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என தெரிவிக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41