யாழ். பல்கலைகழக பகுதியில் திடீரென இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். பல்கலைகழக வாயிலில் மாணவர்கள் காணப்பட்ட நிலையில், பொலிஸார் அப்பகுதிக்கு வந்து அவர்களை உள்ளே செல்லுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.

இதையடுத்து மேலதிகமாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் வரவழைக்கப்பட்ட நிலையில் பதற்றநிலை மேலும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வாயிலில் வழமையாக மாணவர்கள் கூடுவதைப் போன்றே இன்றும் தாம் கூடியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு மாணவர்கள் இவ்வாறு பல்கலைக்கழக வாயிலில் ஒன்றுகூடியிருப்பர் என்ற எதிர்பார்ப்பில் இவ்வாறு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.