மாத்தளை, ரத்தொட்டை ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான போம்ப குமார கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர். 

மாத்தளை குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிந்து 2 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மாத்தளை  ரத்தொட்டை பகுதியிலுள்ள சந்தேக நபரின் வீட்டில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

சந்தேக நபர் அவரின் வீட்டில் நீண்ட நாட்களாக இரகசிய போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.