குரல்வளையில் ஏற்படும் புண், முடிச்சுகள், சதைகள் உள்ளிட்ட பாதிப்புகளை கண்டறிய டிரான்ஸ்யூட்டானியஸ் குரல்வளை அல்ட்ராசோனோகிராபி என்ற புதிய பரிசோதனை முறையை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

பாடகர்கள், பண்பலை வானொலி அறிவிப்பாளர்கள், தொகுப்பாளர்கள், பேச்சாளர்கள், ஆசிரியர்கள், சொற்பொழிவாளர்கள்.. என பேச்சை வாழ்வாதாரமாக கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய குரல் வளையில் புண் உண்டாகலாம். 

குரல்வளையில் மடிப்பு சதைகள் மற்றும் பொலிப்ஸ் எனப்படும் சதைகள் உருவாகலாம். 

சிலருக்கு மிக அரிதாக பொலிப்பாய்ட் கோர்டிடிஸ் என்ற பாதிப்பு ஏற்படலாம். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு சோர்வடைந்து விடுவார்கள். 

இவற்றையெல்லாம் தற்போது டிரான்ஸ்யூட்டானியஸ் குரல்வளை அல்ட்ராசோனோகிராபி என்ற புதிய பரிசோதனை முறை மூலம் எளிதாக கண்டறியலாம். 

இந்த பரிசோதனையின் மூலம் குரல்வளையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை துல்லியமாக அவதானித்து, அதற்கேற்ற வகையில் சிகிச்சை வழங்கி அவர்களை குணப்படுத்த இயலும்.

பொதுவாக ஆண்களைவிட, 20 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இத்தகைய பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டாலும் சிகிச்சையின் மூலம் குணப்படுத்த இயலும். 

இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டால் முதலில் பேச்சில் தடை ஏற்படும். பிறகு குரல் ஒலியில் மாற்றங்கள் ஏற்படும். 

சிலருக்கு பேசுவதற்கே சிரமம் உண்டாகும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் அவர்கள் இதற்கான பிரத்யேக மருத்துவ நிபுணர்களை சந்தித்து, அறிமுகமாகியிருக்கும் நவீன பரிசோதனையை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். 

அதன் பிறகு சிகிச்சையுடன் பூரண ஓய்வும், மௌன விரதமும் இருந்தால், விரைவில் குரல்வளை இயல்பான நிலைக்கு திரும்பும்.