மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குஞ்சிக்குளம் வீதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளில் 103 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீதியில் வந்த சந்தேகத்திற்கிடமான மீன்கள் ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியொன்று நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இதன்போது சூட்சுமமான முறையில் லொறியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 103 கிலோ 200 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களான லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 39 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.