ரோயல்  செலஞ்சர்ஸ் பெங்களூரு அணித் தலைவர் விராட் கோலிக்கு இந்திய நாணய மதிப்பில் 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று துபாயில் நடந்த ஆட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் ‍லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. 

இப் போட்டியில் பெங்களூரு அணி 97 ஓட்டங்களினால் படுதோல்வியைத் தழுவியது.

இந்த போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் அந்த அணியின் தலைவர் விராட் கோலிக்கு இந்திய நாணய மதிப்பில் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.