இரத்தினபுரி - கொலன்னா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய 3 பொலிஸ் அதிகாரிகள் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் நபருடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பாதுகாப்பு உதவியாளர் ஆகியோரே நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.