மெக்சிகோவில் சாக்கடையை சுத்தம் செய்யும்போது, வெளியேறிய இராட்சத எலி பொம்மையை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நகர்ப்பகுதியில் கழிவு நீர் கால்வாயை அடைத்து இருந்த குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, குப்பைகளோடு அடைபட்டிருந்த இராட்சத எலி ஒன்று திடீரென வெளியேறியதை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர், அதனை சோதனை செய்ததில், அது ஹலோவின் திருவிழாவிற்காக வடிவமைக்கப்பட்ட மெகா எலி பொம்மை என்று தெரியவந்ததள்ளது.

புயல் மற்றும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, அந்த எலி பொம்மை சாக்கடையில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.