முல்லைத்தீவு நஞ்சுண்டான் குளத்தால் பாராளுமன்றில் ஏற்பட்ட குழப்பம்

25 Sep, 2020 | 12:06 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

முல்லைத்தீவு மாவட்டத்தின்  புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  நஞ்சுசுண்டான் குளம் கமத்தொழில் அமைச்சின் கீழ் வருமா அல்லது நீர்ப்பாசன அமைச்சின் கீழ் வருமா என்பது தொடர்பில் சபையில் குழப்பநிலை ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  வன்னி மாவட்ட எம்.பி.சார்ள்ஸ் நிர்மலநாதன், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நஞ்சுசுண்டான் குளப் புனரமைப்புக்காக கடந்த அரசினால் 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தபோதும், தொடர் மழை காரணமாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியாமல் போனதால் அந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பில் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம்  கேள்வி எழுப்பியிருந்தார்.

இக்கேள்விக்கு தமிழில் பதிலளித்த கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, 

உறுப்பினரே இந்தக்கேள்வி எனது அமைச்சுக்குரியதல்ல. இது நீர்ப்பாசன அமைச்சுக்குரியது. அந்த அமைச்சிடம் தான் நீங்கள் இக்கேள்வியை கேட்க வேண்டும் என்றார்.

இதனை மறுத்த சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. இல்லை, இது கமத்தொழில் அமைச்சிற்குரியது. அந்த அமைச்சுத்தான் இதற்கு முதலில் நிதி ஒதுக்கியது என்றார்.

இல்லை உறுப்பினரே அது எனது அமைச்சுக்குரியதல்ல என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மீண்டும் கூறினார்.

தொடர்ந்தும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, இல்லை. அது உங்கள்  அமைச்சுக்குரியதுதான். அங்குள்ள கமத்தொழில் திணைக்கள அதிகாரிகள் கூட  நஞ்சுசுண்டான் குளம் தங்களுக்குரியது என்று தான் கூறியுள்ளனர் என்றார்.

அதற்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, 

சரி உறுப்பினரே கடந்த அரசில் அது கமத்தொழில் அமைச்சுக்குரியதாகத்தான்  இருந்தது. இப்போதைய அரசில் அது சமல் ராஜபக்சவின் நீர்ப்பாசன அமைச்சுக்குரியது என்று கூறினார். பின்னர், சபையில் இருந்த சமல் ராஜபக்சவிடம் ஏதோ பேசிவிட்டு, உறுப்பினரே அந்தக்குளத்துக்குரிய நிதி அடுத்த வருடம் ஒதுக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் சமல் ராஜபக்ச கூறுகின்றார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24