வடக்கு ஆப்கானிஸ்தானில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான எம்.டி -530 ஹெலிகொப்டர் பாக்லான் மாகாணத்தில் வியாழனன்று விபத்துக்குள்ளானதாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.