பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் லேசான தொற்றுடன் சென்ற அவருக்கு திடீரென, பாதிப்பு அதிகமானது. இதனால் தீவி சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் கடந்த 24 மணி நேரமாக மீண்டும் கவலைக்கிடம் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவக்குழுவினர் எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என அறிவிப்பு வெளியாகிய நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலைக்கு நடிகர் கமல்ஹாசன் சென்றார். பின்னர் எஸ்.பி.பி. மகன் சரணிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எஸ்.பி.பி. நலமாக இருக்கிறார் என்று கூற முடியாது. உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றார்.