புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 20 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சுற்றுவளைப்பு புத்தளம் கரிக்கட்டைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 3 இலட்சம்  ரூபா பெருமதியென தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாலாவி பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.