பிரேஸில் ரியோ டி ஜெனிரோ நகரில் 2021 பெப்ரவரி மாதம் நடைபெறவிருந்த சம்பா திருவிழா அணிவகுப்பு காலரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிகழ்வின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரியோ டி ஜெனிரோ திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

தொற்றுநோயால் 4.5 மில்லியன் நோய்த்தொற்றுகள் மற்றும் 138,000 க்கும் அதிகமானோர் இறந்த நாடுகளில் பிரேசில் ஒன்றாகும்.

சம்பா திருவிழாவின் தலைவர் ஜேதர்ஜ் காஸ்டன்ஹீரா, 

பெப்ரவரியில் நிகழ்வைத் நடத்த அல்லது ஏற்பாடு செய்ய சம்பா பாடாலைகளுக்கு நேரம் இருக்காது என்று கூறினார்.

பிரேசில் இன்னும் தினமும் ஆயிரக்கணக்கான புதிய கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணுகின்றது. வியாழக்கிழமை நாட்டில் 32,817 கொரோனா தொற்றாளர்களும் 831 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.