உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் நடிகர் ஆர்யா இளைய தலைமுறை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் தன்னுடைய இணையப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'சல்பேட்டா'. வடசென்னை மக்களிடையே பிரபலமான பாரம்பரிய குத்துசண்டை போட்டியை மையப்படுத்திய இந்த திரைக்கதையில் ஆர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். 

குத்து சண்டை வீரர் என்ற கதாபாத்திரம் ஏற்பதால் நடிகர் ஆர்யா அதற்காக தன்னை பிரத்தியேகமாக உடற்கட்டை தயார்படுத்தி வருகிறார். உடற்பயிற்சி வழிகாட்டி நிபுணர் ஒருவரின் மேற்பார்வையில் நடிகர் ஆர்யா மேற்கொண்டுவரும் இந்த உடற்பயிற்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

அதிலும் அவர் 150 கிலோ எடையுள்ள பளுவை வலு தூக்கும் வீரர்களைப் போல் தூக்கி பயிற்சியில் ஈடுபடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. ஆர்யாவின் இந்த அர்ப்பணிப்பை இளைய சமுதாயத்தினர் ஆச்சரியத்துடன் பார்வையிடுவதுடன் பகிர்ந்தும் வருகிறார்கள். இந்தப்படத்தில் ஆர்யாவுடன் நடிகர்கள் கலையரசன், ஜோன் கொக்கன் மற்றும் நடிகை துஷாரா ஆகியோர்கள் நடிக்கிறார்கள்.

இதனிடையே நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் டெடி விரைவில்  வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.