'கடாரம் கொண்டான்' என்ற படத்தைத் தொடர்ந்து நடிகை அக்ஷரா ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்தின் டீசர் இன்று வெளியானது.

அறிமுக இயக்குனர் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் தயாராகி வரும் இத்திரைப்படம் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'. 

கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் உலக நாயகன் கமலஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் கதையின் நாயகியாக நடிக்கிறார். 

பாடகி உஷா உதுப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், அக்ஷசரா ஹாசனின் சகோதரியும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் இப்படத்தின் டீசரை இன்று இணையத்தில் வெளியிட்டார்.

டீஸரில் இடம்பெற்ற வசனங்கள் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை என்றாலும், அக்ஷரா ஹாசனின் குண்டான தோற்றம் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.