மாத்தறை - கந்தர பகுதியில் 7 கிராம் ஹெரொயின் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் (21) ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (16) குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் நீண்ட காலமாக ஹெரொயின் போதைப்பொருளை விற்பனை செய்து வருகின்றமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞர் ஹெரொயின் போதைப்பொருளை வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் குறித்த பகுதியில் உள்ள மீனவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.