திருகோணமலை, கல்கடவெல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய எம்.சுனேத்ரா பிரியதர்சனி தயிர் உட்கொண்டதில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

தயிர் உட்கொண்டபோது மயக்கமடைந்த இவர், கோமரங்கடவெல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.  

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.