(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

சமாதான நீதிவான் நியமனங்களை  வழங்க அடிப்படைக் கல்வித் தகுதியாக  கல்வி பொதுத் தராதர சாதாரண தரம்  கொள்ளப்படும் என  நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

எனினும் இது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொருந்தாது. அவர்களின் செயற்திறமையை கருத்திற்கொள்ளப்படும்.

எனவே சமாதான நீதிவான்கள் நியமனங்கள்  வழங்கப்படும்போது  கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்தை அடிப்படையாகக்கொண்டு சமூகப் பணியில்  ஈடுபடுவதே முக்கிய தகுதியாகக் கொள்ளப்படும் என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான  கேள்வி நேரத்தில் அரச தரப்பு எம்.பி. சாந்த பண்டார  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.