கொழும்பு, கொட்டிகஹாவத்தை பகுதியில் எரிவாயு குழாயொன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

கொட்டிகஹாவத்தை பொது மயான தகனசாலையில் சடலமொன்றை தகனம் செய்ய முற்படுகளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.